மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி: மோடி இரங்கல்

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் மோடி
Updated On :21 ஜனவரி 2021, 2:36 pm

ANI

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த சோகமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.