தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் காரியக் கமிட்டி: விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

News image

காங்கிரஸ் காரியக் கமிட்டி: விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றம்

Updated On :22 ஜனவரி 2021, 9:41 am

ANI

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி கூறியும், தடுப்பூசி போடுவதற்கு மக்கள் முன்வர வேண்டுமென்றும், வாட்ஸ்ஆப் தரவு கசிந்தது தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிரேக்டர் பேரணி, மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள், காங்கிரஸ் உள்கட்சி தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.