தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவின் பால் விற்பனை 26 லட்சம் லிட்டராக அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் பாலின் விலைக் குறைப்பிற்கு பின்பு விற்பனையானது 26 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2021, 1:16 pm

DIN

தமிழகத்தில் ஆவின் பாலின் விலைக் குறைப்பிற்கு பின்பு விற்பனையானது 26 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,

விலைக்குறைவுக்கு பின் கடந்த மே 23ஆம் தேதி சென்னையில் 15.4 லட்சம் லிட்டரும், மே 22ஆம் தேதி பிற மாவட்டங்களில் 12.59 லட்சம் லிட்டரும் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தினசரி பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரிலிருந்து 40 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் விலை குறைத்து கையெழுத்திடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.