
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 16-ம் தேதி கூடுகிறது. மேலும், அன்றைய தினமே பேரவைத் தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என். ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெறாமல் உள்ளன. இந்த நிலையில், பேரவைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல் சட்டப்பேரவை கூட்டம் புதுச்சேரியில் 16 ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது.
அன்று சட்டப்பேரவை தலைவர் தேர்தல் நடைபெறும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் ஆர்.முனிசாமி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.