காங்கயம் தொகுதியை ஒதுக்க புதிய நீதிக் கட்சி கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறார் பு.நீ.க ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.தங்கத்தம்பி.
கூட்டத்தில் பேசுகிறார் பு.நீ.க ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.தங்கத்தம்பி.

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

வெள்ளக்கோவிலில் புதிய நீதிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.தங்கத்தம்பி தலைமை வகித்தார். கட்சி மாநில அமைப்புச் செயலாளர்கள் வெள்ளக்கோவில் சௌந்தரராஜன், கவுந்தப்பாடி அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கயம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இவற்றில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் உள்ளனர். எனவே முதலியார் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு காங்கயம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com