குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

‘எங்கள் ஆட்சியில் தான் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது’: அசாம் பாஜக தலைவர்

பாஜக ஆட்சியில் தான் அசாமின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ்
Updated On :5 மார்ச் 2021, 9:36 am

ANI

பாஜக ஆட்சியில் தான் அசாமின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிலவரம் குறித்து மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஞ்சித் கூறியதாவது,

பாஜக, ஏஜிபி மற்றும் யுயுபிஎல் கட்சிகளுடன் 86 தொகுதிகள் பங்கீடு குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.

மேலும், அசாமில் பாஜக மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில், நாங்கள் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம். பாஜக ஆட்சியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தியது ஒரு அடையாளமாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் 6 மருத்துவமனைகளை மட்டுமே காங்கிரஸ் கட்டியுள்ளது. ஆனால், பாஜக கடந்த 5 ஆண்டுகளில் எய்ம்ஸ் உள்பட 11 மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.