தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி
தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
கடந்த 15 நாள்களுக்கு மேலாக தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...