பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாள்தோறும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன், படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இறக்குமதி, ஆக்ஸிஜன் தயாரிக்கும் இடங்களில் இருந்து  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர்களை கொண்டு செல்லும் பணிகளை இந்திய விமானப்படை செய்து வருகின்றது.

மேலும், நாடு முழுவதும் தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை ராணுவம் செய்து வருகின்றது.

இந்நிலையில், கரோனா பேரிடரை சமாளிக்க ஆயுதப் படைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முப்படைகளின் தளபதிகள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இன்று மாலை ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com