பாஜக சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா வெற்றி
பாஜக சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.


பாஜக சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தனக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுமாறு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியில் நிற்காமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.
அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டது. இந்நிலையில் காலை முதலே பின்னடைவை சந்தித்த மம்தா, பிற்பகலுக்கு பிறகு முன்னிலை பெற்றார்.
தற்போது சுவேந்து அதிகாரிக்கு எதிராக போட்டியிட்ட மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூலில் இருந்து பாஜகவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...