தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எளிய முறையில் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின்

எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Updated On :2 மே 2021, 6:50 pm

DIN

எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி சான்றிதழை பெற்ற அவர், திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பேசியது,

தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்களுக்கு திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் பாதளத்திற்கு சென்றதை உணர்ந்து அதை சரிசெய்வதற்காக மதசார்பற்ற கூட்டணியை வெற்றி பெற செய்துள்ளீர்கள். 

மக்களின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் உணர்ந்து எங்கள் ஆட்சியை நடத்துவோம்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக நிறைவேற்றுவோம்.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழாவை மிக எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.