சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகத்தில் 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 8:12 pm

DIN

தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் மே 24 வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 24 மணிநேரமும் பேருந்துகளை இயக்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்ற போக்குவரத்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின் அதிகம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட செய்தியில்,

ஊரடங்கின் போது கட்டணம் அதிகமாக வசூலித்த 304 ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 25 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மொத்தம் ரூ. 38.12 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.