குஜராத் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மோடி
By DIN | Published On : 16th June 2021 02:12 PM | Last Updated : 16th June 2021 02:12 PM | அ+அ அ- |

பிரதமர் நரேந்திர மோடி
ஆனந்த்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆனந்த் மாவட்டம் இந்திரானஜ் கிராமத்துக்கு அருகே, காரும், எதிரே வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 10 பேர் உயிரிழந்தனர்.
ஆனந்த் மாவட்டத்தின் தாராபூர் - அகமது மாவட்டம் வடமான் பகுதியை இணைக்குமிடத்தில் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மிக வேகமாக வந்த டிரக், கார் மீது மோதியதில், காரில் இருந்த குழந்தை உள்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
குஜராத் சாலை விபத்தில் பலர் உயிரிழந்த தகவல் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.