விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் ரகுநாத் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ரகுநாத் தனது வாக்கினை செங்கல்பட்டு அனுமந்த புத்தேரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் பதிவுசெய்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2022, 7:54 am

DIN

செங்கல்பட்டு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ரகுநாத் தனது வாக்கினை செங்கல்பட்டு அனுமந்த புத்தேரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் பதிவு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி, ஆகியவைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் பகல் 12 மணி வரை  28 சதவீதம் மட்டும் வாக்குகள் பதிவாகியது. ஆமை வேகத்தில் பதிவாகும் இந்த வாக்குப்பதிவு பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கூடுதல் சதவீதத்தை காட்டும் வகையில் மக்கள் தங்களது ஓட்டு வாக்கினை  பதிவு செய்வார்கள் என்று கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் நம்பி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஏரியாவிலும் வாக்குப்பதிவு மையத்திலும் மக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

முதியவர்களான மூத்த குடிமக்கள் தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காக ஆட்டோவில் வாக்குப் பதிவு செய்யும் மையத்திற்கு வந்து வாக்கு மையத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஒவ்வொரு வாக்குப்பதிவு பெறும் மையங்களுக்கும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு வருகிறார். இதேபோன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், ஏ எஸ் பி ஆதர்ஷ் பட்சேரா, துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் அங்காங்கே வாக்கு மையத்துக்குச் சென்று அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பினை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.