திருப்பூர் 406-வது வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பாரப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த


திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பாரப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 406-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் பழுதை சரி செய்ய முடியவில்லை.
இதையடுத்து பழுதான எந்திரத்திற்கு பதில் மற்றொரு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டது. அதன்பிறகு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. வாக்குச்சாவடி பணியாளர்கள் செல்போன் மூலம் டார்ச் அடித்து பணிகளை செய்தனர். சிறிது நேரத்தில் மின் பணியாளர்கள் வந்து மின்வெட்டை சரி செய்தனர். அதன்பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...