நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'குடிமகன் என்பதை உணரச்செய்தது முதல் வாக்கு'

நாட்டின் குடிமகன் என்பதை முழுமையாக உணரச்செய்தது எனது முதல் வாக்கு என்று வேலூரில் முதன்முறையாக வாக்குப்பதிவு செய்த இளைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 7:32 am

DIN

நாட்டின் குடிமகன் என்பதை முழுமையாக உணரச்செய்தது எனது முதல் வாக்கு என்று வேலூரில் முதன்முறையாக வாக்குப்பதிவு செய்த இளைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, இரு நகராட்சிகள், நான்கு பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதலே மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

Story image

குறிப்பாக, 18 வயது நிரம்பி வாக்காளர்களாக பதிவு செய்திருந்த இளைஞர்களும், இளம்பெண்களும் முதன்முதலாக தங்களது வாக்கினை பதிவு செய்திட வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்ததையும், அவர்கள் தங்களின் முதல் வாக்கை பதிவு செய்துவிட்டு மிகவும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்ததையும் காணமுடிந்தது.

அவர்களில் பெரும்பாலோனார் கூறுகையில், பெற்றோரின் அரவணைப்பில் இருப்பதால் இதுவரை விளையாட்டுத் தனமாகவும், குடும்பத்தைக் கடந்து பொது விஷயங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டோம். தற்போது வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து அனைத்துத்தரப்பு மக்களுடன் இணைந்து வரிசையில் காத்திருந்து எங்களது முதல் வாக்கை பதிவு செய்த இந்த தருணம் நாங்களும் இந்நாட்டின் குடிமகன் என்பதை முழுமையாக உணரச் செய்துள்ளது. மேலும், ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக நாட்டிற்குரிய பங்களிப்பு செய்திட இந்த முதல் வாக்கு அனுபவம் எங்களை வழிநடத்தும் என நம்புகிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.