பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தாமதம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சனிக்கிழமை காலையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

News image
திருவள்ளூர் லட்சுமி பள்ளியில் வாக்கு செலுத்த நீண்ட வரிசையில் காத்தருந்த பெண்கள்.
Updated On :19 பிப்ரவரி 2022, 5:57 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சனிக்கிழமை காலையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் திருவள்ளூர் நகராட்சி 11-ஆவது வார்டு ராஜாஜி சாலையில் நகராட்சி பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் 50 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.    

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி-1, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருமழிசை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, நாராவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தம் 318 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர்த்து மீதமுள்ள 815 வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 1797 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலையில் 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதையடுத்து மாலை 5 முதல் 6 மணி வரையில் கரோனா நோய் தொற்றால் பாதித்தோர் வாக்களிக்கவும் இருக்கின்றனர்.

  இதில் திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 51 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வெப்பமாணி பரிசோதனை செய்து, கிருமி நாசினி மற்றும் கையுறையும் வழங்கியும் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆவடி மாநகராட்சி 39-ஆவது வார்டில் உள்ள நசரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பட்டாபிராம் சத்திரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர்.

   இதற்கிடையே நகராட்சி 11-ஆவது வார்டில் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறானது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் விரைந்து வந்து சரி செய்ய முடியாததால், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.