புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவர் அனிஷ் கான் மரணம்: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் அனிஷ் கான், ஹவுராவில் படுகொலை செய்யப்பட்டார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 6:50 am

PTI

கொல்கத்தா: மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக 130 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மாணவர் அனிஷ் கான், ஹவுராவில் படுகொலை செய்யப்பட்டார். 

மாணவர் தலைவர் அனிஷ் கானின் சந்தேக மரணம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்தார்.

கானின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிய நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை இரவு நான்கு பேர் போலீஸ்  சீருடைகளை அணிந்துகொண்டு தங்கள் வீட்டிற்கு வந்ததாகக் கானின் தந்தை குற்றம் சாட்டினார். அம்தாவில் உள்ள தங்கள் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தனது மகன் தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கானின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.