ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எடப்பாடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தாக்கிய இளைஞரை விடுவிக்கக் கோரி திமுகவினர் மறியல்

எடப்பாடி அருகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தாக்கிய 

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 8:54 am

DIN

எடப்பாடி: எடப்பாடி அருகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தாக்கிய இளைஞரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அவரை விடுவிக்கக் கோரி திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம். இங்குள்ள வாக்குச்சாவடி பதட்டமானது என கண்டறியப்பட்ட நிலையில், இப்பகுதியில் வாக்குப்பதிவின் போது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்கு நடைபெறும் பாதுகாப்பு பணியினை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீஅபிநவ் சனிக்கிழமை இன்று நண்பகலில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். 

அப்போது வாக்குப்பதிவு மையத்தில் நின்றிருந்த கூடுதலான நபர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக வேட்பாளர் பெருமாள் ஆறுமுகத்தின் சகோதரர் பாண்டி கணேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரைப் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து அங்கு திரண்ட திமுகவினர் இளைஞர் பாண்டி கணேசனை உடனடியாக விடுவிக்க கோரி எடப்பாடி பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தாக்கியதாக கூறப்படும் பாண்டி கணேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.