மேற்குவங்கத்தில் கல்வி நிலையங்களுக்கு ஒருவாரம் விடுமுறை- முதல்வர் மம்தா பானர்ஜி  

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்
மேற்குவங்கத்தில் கல்வி நிலையங்களுக்கு ஒருவாரம் விடுமுறை- முதல்வர் மம்தா பானர்ஜி  

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பெங்காலி செய்தி சேனலிடம் கூறியதாவது, கடந்த சில நாட்களாக பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு குழந்தைகள், தலைவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் குறித்து புகார் கூறுகின்றனர். எனவே, கடுமையான வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த வாரம் மூடப்படும். 

இதனை தனியார் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com