கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னையில் ஆக. 3-ல் ஆசிய ஹாக்கிப் போட்டி!

சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 12:39 pm

DIN

சென்னையில் ஆசிய ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவித சர்வதேச ஹாக்கிப் போட்டிகளும் நடத்தப்படாத நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய ஹாக்கி மற்றும் தமிழக விளையாட்டுத் துறை இணைந்து நடத்தும் ‘ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023’ வருகின்ற ஆகஸ்ட் 3 முதல் 12-ஆம் தேதி வரை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், மலேசியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உள்ளிட்ட ஆசியாவின் டாப் 6 அணிகள் பங்கேற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.