

இதுவரை சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மொத்தம் 30 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளிலும் வென்றுள்ளது.
ஆனால் அதே சமயம் பெங்களூருவில் நடைபெற்ற 9 போட்டிகளில் 4-4 என இரு அணிகளும் சமமாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றோரு போட்டி முடிவு இல்லை.
இந்நிலையில், பெங்களூரு சின்னஸ்வாமி ஆடுகளத்தில் நடைபெறும் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும். புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, 7வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கும் இந்தப் போட்டி பலப்பரீட்சையாக இருக்கும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் 6 புள்ளிகளுடன் 2வது அல்லது 3வது இடத்திற்கு முன்னேறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.