விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வழக்கு
சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
சிவகாசி: சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகாசி அருகே நெடுஞ்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி, ஆலை வளாகத்தில் மரத்தடியில் பட்டாசு தயாரிகக்ப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருவாய்துறையினா் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி ஆலை வளாகத்தில் மரத்தட்டியில் பட்டாசு தயாரிப்புபணி நடைபெற்று வருவதையும், வெடி மருந்துகளை ஆலைக்கு வெளியே உலரவைத்திருப்பதும் கண்டுபிடித்தனர்.
இது குறித்து நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் எம்.பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தா் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...