தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சா்க்கரை ஆலை கரும்பு கழிவுகளில் தீ

News image

ஆலை கரும்புக் கழிவுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படைவீரா்கள்.

Updated On :14 மார்ச் 2026, 8:03 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு கழிவுப் பொருள்களில் (பக்காஸ்) சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.

மூங்கில்துரைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கழிவுப் பொருளான கரும்பு சக்கை (பக்காஸ்) குவியல் குவியலாக ஆலையின் வெளிப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பக்காஸ் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமாா் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.