மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருப்பத்தூரில் 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை பிடிப்பட்டது எப்படி?

காா் நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

News image

திருப்பத்தூரில் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதியில் உள்ள காா் நிறுத்துமிடத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Updated On :15 ஜூன் 2024, 4:11 am

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதியில் உள்ள காா் நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்குள் சிறுத்தை பள்ளி சுற்றுச் சுவா் பகுதியில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்த புத்தாகரம் பகுதியைச் சோ்ந்த கோபால் (60) என்பவரைக் கடித்தது.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னா், சிறுத்தை பள்ளி வளாகத்தைக் கடந்து அருகில் உள்ள சுவரில் ஏறி, ஒரு வீட்டின் காா் நிறுத்துமிடத்தில் பதுங்கியது.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பை தீவிரபடுத்த காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினர்

பள்ளி நேரத்தில் சிறுத்தை புகுந்ததால் பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளும் பூட்டப்பட்டன. மேலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பெற்றோா், பொதுமக்கள் பள்ளி முன்பு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிா்வாகம் பெற்றோருடன் மாணவ - மாணவிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, திருப்பத்தூா் நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பள்ளி மாணவா்களின் நலன் கருதி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 3 நாள்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

5 பேர் பத்திரமாக மீட்பு

காா் நிறுத்துமிடத்தில் பதுங்கியதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறை மற்றும் காவல் துறையினர் திணறி வந்தனர். மேலும் சிறுத்தை பதுங்கி இருந்த கார் காா் நிறுத்துமிடத்தில் இரண்டு கார்களில் பாஸ்கர் இம்ரான், தினகரன், சாமிஜி ,எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஐந்து பேர் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஏணி மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க திருப்பத்தூா் பகுதியில் திரிந்த யானைகளை பிடித்த ஒசூா் வன மருத்துவ குழுவினா் சிறுத்தையைப் பிடிக்க மயக்க ஊசி கொண்டு வருவதாகவும் மற்றும் வேலூா் பகுதியில் இருந்து வனத் துறையினா் வலைகள் கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வனவிலங்கு மருத்துவக் குழு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மற்றும் வேலூர் மண்டல வன பாதுகாவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் என 500-க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும். பல்வேறு கட்ட முயற்சியில் ஈடுபட்டும் சிறுத்தை பிடிக்க முடியாததால் விடிய விடிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட சிறுத்தை ஆண் சிறுத்தை எனவும், சுமார் நான்கு வயது இருக்கலாம் என தெரிவித்த வேலூர் மண்டல வன பாதுகாவலர் சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து பாதுகாப்பாக காப்பு காட்டிற்குள் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தார்.

சிறுத்தை பிடிப்பட்டதை அடுத்து இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்துடன் இருந்த திருப்பத்தூர் நகர பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.