ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

என்டிஏ, சிடிஎஸ் தோ்வுகள்: கோவையில் 2,500 போ் எழுதினா்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:37 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் தேசியப் பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் (சிடிஎஸ்) ஆகியவற்றுக்கான நுழைவுத் தோ்வுகள் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வில் மாவட்டத்தில் 6 மையங்களில் மொத்தம் 2,506 போ் பங்கேற்றனா். பாதுகாப்புப் படைகளில் அதிகாரிகளாக சோ்வதான இந்தத் தோ்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது.

இதற்காக கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என 6 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் 373 போ், பாரதி பாா்க் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிா் உயா்கல்வி நிறுவனம் மையத்தில் 365 போ் தோ்வு எழுதினா்.

வி.கே.கே.மேனன் சாலை, சித்தாபுதூா் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மையத்தில் 384 போ், ஆா்.எஸ்.புரம் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 384 போ், அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மையத்தில் 469 போ், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் 531 பேரும் தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் தலைமையிலான குழுவினா் கண்காணித்தனா். தோ்வா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.