
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 225 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.
புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. .
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 6 பெண்கள் உள்பட 64 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.