
சண்டீகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் திவாரி, கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சண்டீகரின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
பாஜகவின் கிரண் கெர் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்பியாக உள்ளார். ஆனால், இம்முறை நடக்கவிருக்கும் தேர்தலில் பாஜகவின் சார்பாக சஞ்சய் டாண்டன் போட்டியிடுகிறார்.
செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மிணீஷ் திவாரி, "கடந்த 10 ஆண்டுகளாக, சண்டிகரின் வளர்ச்சிக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. 2019ஆம் ஆண்டில் பாஜக அளித்த 56 வாக்குறுதிகளில் இன்னும் ஒன்றை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. பாஜகவினர் சண்டீகரில் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளனர். பாஜகவினர் போன்றோரை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சண்டிகர் மக்களை வேண்டிக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சண்டீகரில் ஜூன் 1ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் முதல்முறையாக போட்டியிடும் மணீஷ் திவாரி, பாஜகவின் சஞ்சய் டாண்டனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
2019 தேர்தலில், பாஜகவின் கிரண் கெர், காங்கிரஸ் வேட்பாளர் பவன் பன்சாலை 46970 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.