பலூசிஸ்தானின் 3 பல்கலை.கள் இணைய வழிக் கல்விக்கு மாற்றம்!

பலூசிஸ்தானில் பல்கலைக்கழகங்களின் வகுப்புகள் இணையவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 பல்கலைக்கழகங்களின் வகுப்புகள் இணையவழிக் கல்விக்கு மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாகாணத்தின் சர்தார் பஹதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகம், துர்பாத் பல்கலைக்கழகம் மற்றும் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று முக்கிய கல்வி நிறுவனங்களும் அதன் மாணவர்களுக்கான வகுப்புகளை இணையவழியில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் எனவே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நேரில் வரவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலினால் அந்தந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளினால் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதையும் படிக்க: சுனிதா வில்லியம்ஸுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்ய தகவல்கள்!!

இருப்பினும், இந்த மாற்றத்திற்காக காரணம் குறித்து பல்கலைக்கழகங்களின் தரப்பிலிருந்து எந்தவொரு காரணமும் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை.

பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜஹூத் அஹ்மத் பசாய் கூறுகையில், அம்மாகாணத்தில் போராட்டக்காரர்கள் அங்குள்ள நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளதால் மாணவர்களால் நேரில் வந்து கல்வி கற்க முடியவில்லை என்பதால் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சர்தார் பஹதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகத்தின் தரப்பிலிருந்து அதைப்போன்ற காரணமே கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு ரம்ஜான் மாதம் முடிந்த பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துர்பாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் குல் ஹசன் அம்மாகாணத்தில் நிலவும் சூழலினால் பல்கலைக்கழகத்தின் நேரடி செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், பல்கலைகழகத்தின் நிர்வாக கட்டடம் சில மாணவர்களால் சட்டவிரோதமான முறையில் முடக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் குறித்து மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாஃபர் அதிவிரைவு ரயிலை சிறைப்பிடித்தனர். இதில், அந்த ரயிலில் பயணித்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் மூலம் 30 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com