மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் படேல்! இம்முறை ஹோட்டல் அறையில் தாகசாந்தி செய்யும் வீடியோ வெளியீடு!

பாலியல் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் இன்று ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் தன் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்போது அவர்களுடன் பெண் ஒருவரும்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் படேல்! இம்முறை ஹோட்டல் அறையில் தாகசாந்தி செய்யும் வீடியோ வெளியீடு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நீடித்துக் கொண்டிருக்கையில் அரசியல் தலைவர்களிடையே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை மையமாக வைத்து குஜராத் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹர்திக் படேலைப் பற்றிய சர்ச்சையான வீடியோக்கள் தொடர்ந்து எதிர்கட்சிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் ஒரு பெண்ணுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் முறைகேடாக நடந்து கொள்ளும் வகையிலான பாலியல் வீடியோ ஒன்று எதிர்கட்சியினரால் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவுக்கான எதிர்வினையாக ‘ தேர்தலில் தோல்வி கண்டு விடுவோமோ என்ற பயத்தில் பாஜக ஆபாசமான, கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. இது பாஜகவுக்குப் புதிதில்லை. பாஜக தலைவர்கள் தாங்கள் வெறுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்கள் என்று ஹர்திக் படேல் தனது பிரச்சாரக் கூட்டங்களில் காட்டமாகப் பேசியிருந்தார்.

பாலியல் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் இன்று ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் தன் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்போது அவர்களுடன் பெண் ஒருவரும் அமர்ந்து கொண்டு அவர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தலைவர்கள் தாக சாந்தி செய்வது புதிதில்லை... ஆனால் புரட்சித் தலைவர்கள் செய்தால் அது அதிசயம் தான்!

வீடியோ...

மக்களிடையே தங்களது புரட்சிகரமான போராட்டக் கொள்கைகள் வாயிலாக செல்வாக்கைப் பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் இவ்விதம் சராசரி நபர்களைப் போல நடந்து கொள்ளும் முறை கண்டனத்துக்குரியது என எதிர்கட்சிகள் இந்த வீடியோவையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com