
கடந்த 17 ஆம் தேதி மும்பை, நேர்நகர் பகுதியில் வழக்கம் போல பள்ளிச் சிறுமியொருத்தி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது வழியில் திடீரெனக் குறுக்கிட்ட இளைஞன் ஒருவன் அந்தச் சிறுமி எதிர்பாராத நேரத்தில் சரமாரியாக அவளது முகத்தில் தாக்கத் தொடங்கினான். தக்குதலுக்கு சிறுமி எதிர்ப்புக் காட்டியதும் அவனது வேகம் இன்னும் அதிகமானது. அவனது முரட்டுத்தனமான அடிகளால் அதிர்ச்சியடைந்து அச்சிறுமி மயங்கி விழுந்து விட அவளைத் தூக்கி விடக்கூட மனமின்றி அப்போது அங்கிருந்த மக்கள் அச்சம்பவத்தை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதற்கான சாட்சியாக அப்போது அங்கே பதிவான சிசிடிவி வீடியோ பதிவுகள் உள்ளன.
அந்த வீடியோ காட்சி;
மக்கள் நடமாட்டம் மிகுந்த மும்பை சாலையில், சிறுமி ஒருத்திக்கு நேர்ந்த இந்தச் சம்பவமும், அதில் மக்கள் தலையிடாமல் ஒதுங்கிச் சென்ற பாவனையையும் காணும் போது சிறுமிகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளில் தலைநகர் டெல்லிக்கு இணையாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சந்தேகமாக இருக்கிறது. இம்மாதிரி கண் எதிரில் ஒரு பள்ளிச்சிறுமி ஆணொருவனால் தாக்கப்படும் போது சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது என்ன மாதிரியான மனநிலை எனப் புரியவில்லை.
Thanks to yahoo.com & ANI NEWS.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.