ஏலியன்கள் இருப்பது நிஜம் தானா?

"எங்கிருந்து இந்த அசாதாரணமான துகள்கள் உருவாகின்றன? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான சந்தேகக்கேள்விகள் வானியற்பியல் துறை வல்லுனர்கள் அனைவரிடத்திலும் உள்ளது. 
ஏலியன்கள் இருப்பது நிஜம் தானா?

தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாகக் கேட்கப் பட்டு வரும் விடை தெரியாத கேள்விகளில் ஒன்று இது. ஏலியன்கள் என்பவை நமது கற்பனையா? அல்லது நிஜமா? என்ற சந்தேகம் எழக்காரணம்

தொடர்ந்து பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கும் அதிவிரைவு ஆற்றல் காஸ்மிக் கதிர்களே. இந்த காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன? அவை தங்களது இலக்காக பூமியைத் தேர்ந்தெடுத்தது எப்படி? எனும் குழப்பங்கள் தான் விஞ்ஞானிகளை ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பன்னெடுங்காலமாக ஈடுபட வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறிதொரு முயற்சியாக அர்ஜெண்டினாவில் இயங்கும் பியர்ரி ஆக்கர் எனும் சர்வதேச விண்வெளி ஆய்வு மற்றும் கண்காணிப்பகம் தொடர்ந்து பல தசாப்தங்களாக பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்கள் குறித்த தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

பூமியை தாக்கும் ஆற்றல் மிகுந்த காஸ்மிக் கதிர்கள் நமது பால்வெளி கேலக்ஸியின் வெளிப்புற அடுக்குகளிலிருந்து உருவாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா?

பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த அதிவிரைவு காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன? எனும் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருந்த 18 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அனைவரும் தற்போது எதைக் கண்டறிந்திருக்கிறார்கள் என்றால், காஸ்மிக் கதிர்கள் பூமியிலிருந்து 36 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அப்பால் உள்ள வேற்றுக் கிரகங்களின் கேலக்ஸி அடுக்குகளில் இருந்து தான் வருகின்றன எனத் தங்களது பியர்ரி ஆக்கர் சர்வதேச விண்வெளி ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறார்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி, 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு இதைப் போன்ற அதி விரைவு காஸ்மிக் கதிர்களின் தாக்குதலோ அல்லது வேறு எந்த பெரிய ரேடியோ வெடிப்பு பாதிப்புகளோ பூமியில் நிகழ்ந்ததில்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால் இந்தத் தாக்குதல்கள் வேற்றுக்கிரகவாசிகளின் சமிக்ஞைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு எனவும் யூகிக்கப் பட்டது. ஒரு சில விஞ்ஞானிகள் பூமி, மகத்தான ஆற்றல் கொண்ட அண்டவெளிக் கதிர்கள் மூலம் பாதிக்கப்படுவதாகக் கூறினர். ஆனால் அந்தக் கதிர்கள் கேலக்ஸியின் வெளிப்புற அடுக்கிலிருந்து உருவாகின்றனவா அல்லது பூமிக்கு அப்பால் கற்பனைக்கு எட்டாத தொலைவில் அமைந்திருப்பதாகக் கருதப்படும் பிற வேற்றுக் கிரகங்களில் இருந்து வரும் தாக்குதல்களா என்பதில் பெருத்த குழப்பம் நிலவி வந்தது. இது குறித்தான பலத்த வாதங்கள் இப்போது வரையிலும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்களின் ஆற்றலானது, முடுக்கப்பட்ட புரோட்டான்களின் ஆற்றலை விட ஏறக்குறைய ஏழு சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் அங்குள்ள விண்மீன் திரள்களின் விநியோகம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

{pagination-pagination}

"எங்கிருந்து இந்த அசாதாரணமான துகள்கள் உருவாகின்றன? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான சந்தேகக்கேள்விகள் வானியற்பியல் துறை வல்லுனர்கள் அனைவரிடத்திலும் உள்ளது. 

ஆனால் அதற்கான உறுதியான பதில்களை மட்டும் இன்று வரை யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடிந்ததில்லை.

பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்கள் வீடியோ இணைப்பு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com