போலிச்சாமியார்களின் ஆதிக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலிச்சாமியார்கள், தங்களை நவீன யுகக் கடவுள்களாக சித்தரித்துக் கொண்டு அப்பாவி கிராம மக்களையும், மெத்தப் படித்த அறிவாளிகளையும் ஏமாற்றி வருகிறார்கள், பாபா ராம் ரஹீமைப் போன்ற அத்தகைய போலிச்சாமியார்கள் பிடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று ; ஜோதிஷ பீடத்தின் தலைமைப் பொறுப்பை அதாவது அடுத்த சங்கராச்சாரியாராகப் பதவியேற்க ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி மற்றும் ஸ்வாமி ஸ்வரூபானந்த் இருவரது பெயரும் நீதிமன்றத்தில் கூட்டாகப் பரிந்துரைக்கப் பட்டது. அந்தப் பரிந்துரையை நிராகரித்த உயர்நீதிமன்றம்... புதிய தகுதி வாய்ந்த சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க மடத்துக்கு மூன்று மாதங்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.
ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் போது ‘மீதமிருக்கும் 3 பீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து ஜோதிஷ பீடத்துக்கான தகுதி வாய்ந்த குரு ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். ’ என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமல்ல, புது சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க பாரத தேசம் முழுமைக்குமான பாரத தர்ம மகா மண்டலத்தைச் சேர்ந்த குருமார்களும், காசி வித்வத் பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆன்மீக குருக்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thanks to Daily post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு தனித்தீர்மானம்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் நேரில் வழங்க வேண்டும்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



