யூஜிசி வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்

யூஜிசி (UGC) வெளியிட்டுள்ள போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கல்விநிலையங்கள் மற்றும் நிறுவனங்கள்.
யூஜிசி வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்

யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் என்று சொல்லப்படக் கூடிய யூஜிசி, இந்த ஆண்டில் போலிப் பல்கலைக்கழகங்கள் என சுமார் 24 பல்கலைக்கழகங்களைப் பட்டியலிட்டு நேற்று வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பாண்டிச்சேரி ஸ்ரீபோதி அகாதெமி ஆஃப் ஹையர் எஜுகேஷனும் ஒன்று. மீதமுள்ள போலிக் கல்வி நிறுவனங்களின் லிஸ்டையும் பார்த்துத் தெளிந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

யூஜிசி (UGC) வெளியிட்டுள்ள போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கல்விநிலையங்கள் மற்றும் நிறுவனங்கள்.

1. மைதிலி யுனிவர்சிட்டி/ விஸ்வ வித்யாலயா, தர்பங்கா, பீகார்.
2. கமர்ஷியல் யுனிவரிசிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச், டெல்லி.
3. யுனைட்டெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, டெல்லி.
4. வொகேஷனல் யுனிவர்சிட்டி, டெல்லி
5. ADR சென் ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, ADR ஹவுஸ், 8J, கோபாலா டவர், 25 ராஜேந்திரா ப்ளேஸ், புது டெல்லி- 110008
6. இந்தியன் இன்ஸ்டிட்யூஸன் ஆஃப் சயின்ஸ் அண்டு எஞ்சினியரிங், புது டெல்லி.
7.விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி ஃபார் செல்ஃப் எம்ப்ளாய்மெண்ட், இந்தியா, ரோஸ்கார் சேவாசதன், 672, சஞ்சய் என்க்ளேவ், புது டெல்லி 110033
8.அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஸ்பிரிட்சுவல் யுனிவர்சிட்டி), 351 - 352, பேஸ்- 1, பிளாக் A, விஜை விஹார், ரிதலா, ரோகிணி, டெல்லி - 110085.
9. பதகன்விசர்கார் வேர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொஸைட்டி, கோகாக், பெல்காம், கர்நாடகா.
10. செயிண்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, கிஷனத்தம், கேரளா.
11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்.
12. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்னேட்டிவ் மெடிஸின், 80, செளரிங்கி ரோட், கொல்கத்தா -20.
13. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்னேட் மெடிஸின் அண்டு ரிசர்ச், 8- A, டயமண்ட் ஹார்பர் ரோட், செகண்ட் ஃப்ளோர், தகுர்புகுர், கொல்கத்தா - 700063.
14.வாரணசேயா சன்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா, வாரணாசி, உத்தரபிரதேசம், ஜகத்பூரி, டெல்லி.
15.மகிளா கிராம் வித்யாபீடம்/ விஷ்வவித்யாலயா, (மகளிர் யுனிவரிசிட்டி) பிரயாக், அலகாபாத், உத்தரபிரதேசம்.
16. காந்தி இந்தி வித்யா பீடம், பிரயாக், அலகாபாத்,, உத்தரபிரதேசம்.
17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர்.
18. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யுனிவரிசிட்டி (ஓபன் யுனிவர்சிட்டி), அலிகார், உத்தரப் பிரதேசம்.
19. உத்தரப் பிரதேசம் விஷ்வவித்யாலயா, கோசிகலன், மதுரா, உத்தரப்பிரதேசம்.
20. மஹா ராணா பிரதாப் சிக்‌ஷா நிகேதன் விஷ்வவித்யாலயா, பிரதாப்கார், உத்தரப் பிரதேசம்.
21. இந்திரப்பிரஸ்தா சிக்‌ஷா பரிஷத், இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, கோடா, மக்கன்பூர், நொய்டா, பேஸ் 2, உத்தரப் பிரதேசம்.
22. நவபாரத் சிக்‌ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் நம்பர். 242, பானி டங்கி ரோட், சக்தி நகர், ரூர்கேலா- 769014.
23. நார்த் ஒரிஸ்ஸா யுனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்ச்சர் & டெக்னாலஜி, யுனிவர்சிட்டி ரோட் பரிபடா மாவட்டம், மயூர்பஞ்ச், ஒதிஷா- 757003.
24. ஸ்ரீ போதி அகாதெமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், நம்பர் 186, திலாஸ்பேட்டை, வழுதாவூர் ரோட், பாண்டிச்சேரி- 605009.

யுஜிஜி கடந்தாண்டு வெளியிட்டிருந்த போலிப் பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் சுமார் 22 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்தாண்டு நவம்பர் 10 ஆம் தேதி யூஜிசி வெளியிட்டிருந்த கடிதம் ஒன்றில் 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களது பெயரில் இருந்து பல்கலைக் கழகம் எனும் பதத்தை நீக்க வேண்டும் என ஆணையிட்டிருந்தது. அந்தக் கடித ஆணை  நவம்பர் 3, 2017 தேதியிட்ட உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. ஆணையிடப்பட்ட 123 பல்கலைக் கழகங்களும் தங்களது பெயரில் இருக்கும் பல்கலைக் கழகம் எனும் பதத்தை நீக்காவிட்டால் அது யூஜிசி சட்டத்தின் 23 வது பிரிவை மீறிய செயலாகும் எனக் கருதப்படும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com