இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா!

தமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான். இவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார்.
இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா!

சிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது தில்ருபா இசை. அவற்றிலிருந்து பிறக்கும் இசையும் தில்ருபாவில் இருந்து பெறும் இசையைப் போலவே தான் இருக்கும். ஆனால் , தில்ருபாவில் இருந்து பிரவகிக்கும் இசையில் கிடைக்கக் கூடிய அதி நுட்பமான சோக உணர்வு ஒன்று மட்டுமே பிற இசைக்கருவிகளில் இருந்து தில்ருபாவை வித்யாசப்படுத்திக் காட்டக்கூடியது எனலாம். அதனால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் தில்ருபாவையும் எளிதாகக் கையாளலாம். 

தில்ருபாவின் கழுத்துப் பகுதியில் 18 நரம்புக் கம்பிகள் தொகுக்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட சிதாரைப் போலவே தான் இதையும் இசைக்க வேண்டும்!

தில்ருபா வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மிகப் பிரபலமான இசைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தில்ருபா இசை அதிகமும் பயன்பாட்டில் இருக்கிறது/

தமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான். இவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவரது தில்ருபா இசையை ராஜா முதல் ரஹ்மான் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கேள்வி!
அவர் தில்ருபா இசைக்கும் வீடியோ காட்சி இதோ...

  • லேசா லேசா திரைப்படத்தின் ‘ஏதோ ஒன்று, ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன், அது இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்’ பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் வாத்தியங்களின் கூட்டிசையில் தில்ரூபாவைத் துல்லியமாக அடையாளம் காணலாம்.
  • உள்ளம் கேட்குமே திரைப்படத்தின் ‘ஓ மனமே பாடலில் பூஜா, ஆர்யா காதல் தோல்வி மற்றும் நண்பர்களுக்கிடையிலான பிரிவைப் பூடகமாக உணர வைக்கும் முயற்சியில் பூஜாவின் அப்பா இறக்கும் காட்சியில் ஸ்பெஷலாக தில்ருபா ஒலிக்கும். 
  • தில்ருபாவை குதூகலமான மனநிலையை உருவகிக்கும் பாடல்களிலும் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணம் அந்நியன் திரைப்படத்தில் வரும் ‘அண்டக்காக்கா கொண்டைக்காரி’ பாடல்.
  • இப்படி ஹாரிஸ் ஜெயராஜ் தனது பல ஹிட் பாடல்களில் தில்ருபாவை மிக அருமையாகப் பயன்படுத்தி இருப்பார்.

தில்ருபா இசையை தமிழ்த்திரைப்பட பாடல்களில் கேட்டு ரசிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட பாடல்களை மொத்தமாக கீழே உள்ள யூ டியூப் இணைப்பில் கேட்டு மகிழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com