தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? சுப்ரமணியன் சாமி கேள்வி! தமிழிசை பதில் சொல்வாரா?

தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? சுப்ரமணியன் சாமி கேள்வி! தமிழிசை பதில் சொல்வாரா?

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது என்பதெல்லாம் நிருபர்கள் தான் அதிகமாக எழுதுகிறீர்கள். நீங்கள் எல்லாம் ரஜினி மன்ற உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தலைகீழாய் தவமிருக்க, அக்கட்சியின் உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பி யுமான சுப்ரமணியன் சுவாமி தனியார் செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருப்பது அக்கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தி உணர்வை எழுப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக யாருடன் நெருக்கமானால் தேர்தலில் அதற்கு அனுகூலம் கிடைக்கக் கூடும்? என்றொரு கேள்வி சுப்ரமணியன் சாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரளித்த பதில்;

‘தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? இங்கே அது வெறும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் போலத்தானே செயல்பட்டு வருகிறது. யாரையாவது போய் சந்திப்பது, மாலை போடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது... இப்படித்தானே அவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், அதனால் பாஜக குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக பாஜக வின் தலைமையில் மாற்றமில்லை என்றால் தமிழக பாஜகவில் மீண்டும் அதே மாதிரியான நிலமை தான் நீடிக்கப் போகிறது. மாற்றமில்லை என்றால் தேர்தல் வெற்றிக்கான மாற்றங்களை யார் கொண்டு வரப்போகிறார்கள். கட்சிக்கான பலன்களை கொண்டு வராதவர்கள் யாரோ, அவர்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அப்படிப் புதிதாக யாரையாவது கொண்டு வந்தால் தான் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கும். இந்துத்வாவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது. இந்து ஒற்றுமையை நிலைநாட்டக்கூடிய கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இப்போதுள்ளவர்கள் இந்துத்வாவுக்கு சாதகமற்ற  கருத்துக்களையெல்லாம் கூட அறிக்கையாக சமர்பித்து விடுகிறார்கள். அதனால் தமிழக பாஜகவால் தனது இந்துத்வா துறுப்புச் சீட்டை வைத்துக் கொண்டு இங்கே வெற்றி பெற முடியாது.

ரஜினியுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்கிறது என்பதெல்லாம் நிருபர்கள் தான் அதிகமாக எழுதுகிறீர்கள். நீங்கள் எல்லாம் ரஜினி மன்ற உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக ஒன்றுமில்லாத ரஜினியை பாஜகவின் அடையாளமாக்கப் பார்க்கிறீர்கள். இப்போது அவரது மனைவி விஷயத்தில் என்னவாயிற்று என்று பாருங்கள். அவர்களது மானம் போயிற்று அங்கே... நீதிமன்றமே எச்சரித்து அனுப்பியிருக்கிறதே! இவர் தான் வந்து நாளை ஊழலை ஒழிக்கப்போகிறாரா?! ' என்று சுப்ரமணியன் சாமி பதில் அளித்து பரபரப்புக் கிளப்பியிருக்கிறார்.

இதற்கு தமிழக பாஜக தலைமையின் பதில் என்னவாக இருக்கக் கூடும்?!

News concept courtesy: thanthi TV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com