விபத்தில் இறந்தவர் கணவர் என்று அறியாது முதலுதவி அளித்த செவிலியின் துயரம்!
By RKV | Published On : 24th September 2018 02:53 PM | Last Updated : 24th September 2018 02:55 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் முதலுதவி செய்தனர். ஆனால், காயமடைந்தவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தார். இறந்தவரது முகத்தில் அதிக அளவில் ரத்தம் வழிந்திருந்த காரணத்தால் அவரது முகத்தை அடையாளம் காண முடியாமலிருந்திருக்கிறது. செவிலியர் சிவகாமி இறந்தவரது முகத்தை துடைத்து சுத்தப் படுத்தும் போது இறந்தவர் தன்னுடைய கணவர் என்பது அதிர்ச்சிக்குரிய வகையில் தெரிய வந்திருக்கிறது.
தனது கணவருக்குத்தான் தான்... அவர் இறந்தது தெரியாமல் இவ்வளவு நேரம் முதலுதவி செய்திருக்கிறோம் என்பதை அறிந்ததும் அதிர்ந்து துடித்துப்போன செவிலியர், தமது கணவரது உடலைக் கட்டிப் பிடித்த அழுத காட்சி அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்துவதாக இருந்தது.