பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு வந்த சோதனை! 

பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு உலகளாவிய ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது கீழ்க்காணும் தகவலின் அடிப்படையில் நிரூபணம் ஆகிறது. 
பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு வந்த சோதனை! 

பாபா ராம்தேவின் பதஞ்சலி நெய்க்கு உலகளாவிய ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது கீழ்க்காணும் தகவலின் அடிப்படையில் நிரூபணம் ஆகிறது. 

டெல்லி, நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் இருக்கும் பதஞ்சலி ஸ்டோரில் 450 கிலோ நெய் பர்சேஸ் செய்திருக்கிறார் ஷோக்ஸி அபே எனும் 45 வயது நைஜீரியர். நெய் வாங்கினால் காசு தர வேண்டுமே, விலை என்ன தெரியுமா? 2.25 லட்சம் ரூபாய்கள். காசுக்குப் பதிலாக கர்ப்பரேஷன் பேங்க் டெபிட் கார்டை நீட்டியிருக்கிறார் அபே. அந்தக் கார்டைப் பார்த்ததும் கடை உரிமையாளருக்கு லேசாகச் சந்தேகம் வந்து விட்டது. 1 கிலோ 2 கிலோ என்றால் பரவாயில்லை மொத்தம் 450 கிலோ நெய்யை ஒரு மனிதன் டெபிட் கார்டில் வாங்குகிறான் என்றதும் ஜெர்க் ஆன கடைக்காரர் டெபிட் கார்டை வெர்ஃபிகேஷன் செய்ய ஷோக்ஸி அபேயிடம் தகவல்களைக் கேட்டுப்பெற முயன்றிருக்கிறார். ஆனால் சொந்தக் கார்டாக இருந்தால் தானே உண்மையான தகவல்களைத் தர முடியும். ஷோக்ஸியிடம் இருந்தது தான் ஸ்கேன் செய்து திருடப்பட்ட டெபிட் கார்டு ஆயிற்றே! எனவே ஷோக்ஸி மற்றும் அவருடன் வந்த மற்ற இரு நண்பர்களாலும் கடைக்காரரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. பொருத்தமான வேறு அடையாள அட்டைகள் இருந்தால் அதைத் தரச்சொல்லிக் கேட்ட போதும் அதற்கும் ஷோக்ஸி தரப்பில் மழுப்பி இருக்கிறார்கள். கடைக்காரர் என்ன முட்டாளா? இவர்களை நம்பி 450 கிலோ நெய்யைத் தாரை வார்க்க?!  அவர் நெய்யைத் தர மாட்டேன் என மொத்த பாக்கெட்டுகளையும் எடுத்து மீண்டும் கடைக்குள் அடுக்கி விட்டார். இதற்கிடையில் கடைக்காரரின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் ஷோக்ஸியும் அவரது திருட்டுக் கூட்டாளிகளும் கடைக்காரர் அசந்த நேரமாகப் பார்த்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டமெடுத்து விட்டனர். 

ஆனாலும், விடாக்கண்டனான கடைக்காரர் எதற்கும் இருக்கட்டுமே என்று, டெல்லி, நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல்நிலையத்தில்  ஒரு புகாரைப் பதிந்து வைத்து விட்டார். புகாரின் மீதான விசாரணையில் தான் தெரிய வந்திருக்கிறது.
 
ஷோக்ஸி அபே 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் விசா இல்லாமல் இந்தியாவில் வாழ்ந்து வந்திருக்கிறார் என்று. அது மட்டுமல்ல பதஞ்சலி ஸ்டோர்ஸில் பயன்படுத்தப் பார்த்த டெபிட் கார்டும் கூட USA டிஸ்கவர் பேங்க் கார்ட் என்று தெரியவந்திருக்கிறது. அதைக் க்ளோன் செய்து இங்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஒருவழியாக துப்புக் கிடைத்து கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் அல்ஸ்டோனியா அபார்ட்மெண்டில் வசித்து வந்த ஷோக்ஸி துபேயைக் கைது செய்து விட்டது டெல்லி போலீஸ். அவரது கூட்டாளிகளையும் விரைவில் பிடித்து விடுவதாக உறுதி அளித்துள்ளனர் டெல்லி போலீஸார்.

சரி ஷோக்ஸிக்கு எதற்கு அத்தனை கிலோ நெய் என்று இந்தச் செய்தியை வாசிக்கும் யாருக்கேனும் சந்தேகம் வரவேண்டுமே?

இங்கே பதஞ்சலியில் குறைந்த விலைக்கு நெய் வாங்கி நைஜீரியாவில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பதற்காகத் தான் நெய் வாங்கப்பட்டதாகத் தகவல். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com