கிருஷ்ணகிரி: தனியார் செங்கல் சூளைகளுக்காக கிருஷ்ணகிரி அருகே உள்ள சமூக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் வட்டத்திற்கு உள்பட்ட மோடிகுப்பம் ஊராட்சி க்கு சொந்தமான சமுக காடு உள்ளது சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த சமூக காட்டில். வேம்பு, துருஞ்சி, புளி, புரசி, வெப்பாலம், அலுஞ்சி மற்றும் பல வகையான மரங்கள் உள்ளன.
சுமார் 50-60 வயதுடைய இந்த மரங்களை தனியார் செங்கல் சூளை களுக்காக சமூக விரோதிகள் இந்த மரங்களை வெட்டி, டிராக்டர்கள், லாரிகள் மூலம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்பட்டு வரு மோடிகுப்பம் சமூகம் காடு
குறிப்பாக கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள செங்கல் உரிமையாளர்கள் இந்த சமூக காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதுவரையில் 200 டன்னுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கரோனோ தொற்று பாதிப்பால் பிராணவாயு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் நிலையில், பிராணவாயுவை அள்ளி வழங்கும் சமூக காட்டை அழிக்கும் செயலில் ஈடுபடும் சம்பவம், இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கரூா்: 4 பேரவைத் தொகுதிகளில் 62,634 போ் வாக்களிக்கவில்லை!

நீதி ஆயோக் மறுசீரமைப்பு

இளைஞா் தற்கொலை
திருச்சியில் வடமாநில தொழிலதிபரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


