எண்ணற்ற நூல்களை எழுதிய தமிழறிஞர் நெடுஞ்செழியன்!

தமிழ் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் பேராசிரியர் க. நெடுஞ்செழியன்.
எண்ணற்ற நூல்களை எழுதிய தமிழறிஞர் நெடுஞ்செழியன்!

கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியாற்றிக் கொண்டே விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி  எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். 

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள்:

1. இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
2. மெய்க்கீர்த்திகள்
3. தமிழ் இலக்கயத்தின் உலகாய்தம்
4. உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
5. சமூக நீதி
6. தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சகர சம்கிதையும்
7. தமிழர் தருக்கவியல்
8. ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்
9. தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்)
10. சங்க காலத் தமிழர் சமயம்
11. தமிழரின் அடையாளங்கள்
12. சித்தன்னவாயில்
13. சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும்
14. மரப்பாச்சி (கவிதை)
15. நாகசாமி நூலின் நாசவேலை
16. ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
17. பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும்
18. தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம்
19. பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்
20. இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
21. தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் - கருத்தும் 
22. தமிழர் அகத்திணை மரபுகளும் இந்திய காதற்பாடல்களும் 
23. தரும சாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்?
24. சமணர் என்போர் சைனரா?
25. தமிழர் சிந்தனை வரலாறு - தொல்காப்பியம் முதல் பெரியாரியம் வரை
 
பதிப்பித்தவை

1. இந்திய மெய்யியலில் தமிழகம் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. பேராசிரியர் க.அன்பழகன் பவழமாலை - காலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம்
3. கலைஞரின் படைப்பிலக்கித் திறனாய்வு - தமிழ் பல்கலைக்கழகம்
4. இந்திய சமூகப்புரட்சியில் - ஜோதிபா ஃபூலே - பெரியார் - அம்பேத்கர் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்
5. பண்முக நோக்கில் பேரறிஞர் அண்ணா
6. ஆசீவகம் - வேரும் விழுதும்

ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு நூலானது கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது.

திராவிட இயக்கத்தோடு மிக நெருக்கமான உறவு கொண்ட குடும்பம் பேராசிரியர் நெடுஞ்செழியன் குடும்பம். 1968 ஆம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை அண்ணாவின் கரங்களால் பெற்றவர் நெடுஞ்செழியன். 

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அனைத்து தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றி தமிழ் - தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். 

திமுகவில் தலைவர் கருணாநிதி, திமுகவினர் திராவிட இயக்கக் கருத்துகளை தெரிந்துகொள்வதற்காக அறிவாலயம் என்னும் அஞ்சல்வழி படிப்பைத் தொடங்கியபோது, அந்தப் பாடத்திட்டக் குழுவில் பேராசிரியர் நெடுஞ்செழியன் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து திமுக ஆதரவாளராகவும் செயல்பட்டார். 

திராவிட இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட இவர், திமுக பொதுச்செயலர் க. அன்பழகனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர், பேராசிரியர் க.அன்பழகன் 80 ஆம் ஆண்டு மணிவிழாவைப் பேராசிரியர் நெடுஞ்செழியன் நடத்தி, மணிவிழா மலரை வெளியிட்டு க.அன்பழகனுக்குப் பெருமை சேர்த்தார். 

அண்மையில் ரூ.10 லட்சம் பொற்கிழியுடன் கருணாநிதியின் செம்மொழி விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து,  உடல் நலம் குன்றிய நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து  பேராசிரியர் நெடுஞ்செழியன் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com