நீட் விண்ணப்பம்: அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நீட் விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கிறது, விண்ணப்பிக்க விரும்புவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.
நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள்
நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள்

தேசிய தேர்வு முகமையால், மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் எனப்படும் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியிருக்கிறது.

வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து வருகிறார்கள்.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. முன்னதாக, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை மாணவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.

மாணவர்களின் தற்போதைய பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட்கார்டு அளவிலான புகைப்படங்களும், அதில் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் 2022: 11 லட்சம் பேர் விண்ணப்பம்; மே 6 கடைசி நாள்
ப(ந)ஞ்சு மிட்டாய், ஜாக்கிரதை!

இரண்டு புகைப்படங்களையும் ஆன்லைனில் இணைக்க வேண்டும். அதற்கான அளவுகளில் அதனை திருத்திக்கொள்வதும், மாணவர்கள் கையெழுத்திட்ட பிரதியும், மாணவர்களின் பத்து விரல் கைரேகையும் இணைக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடக்கும். இதில் தேர்வாகும் மாணவர்களே அரசுக்கு ஒதுக்கப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி செவிலியர், பிஏஎம்எஸ், கால்நடை மருத்துவம் மற்றும் இதர துணை மருத்துவக் கல்விகளுக்கும் சேர்க்கை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வினை ஆண்டுதோறும் சராசரியாக 15 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் தேர்வெழுதும் பகுதிகளையும் தேர்வு செய்துகொள்ளலாம். பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரு சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com