பிரிட்டனின் புதிய பிரதமர்! யார் இந்த கியெர் ஸ்டார்மர்?
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, புதிய பிரதமராக கியெர் ஸ்டார்மர் அடுத்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமரான ரிஷி சுனக் தனது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் மத்திய - இடது தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 410 இடங்களில் வெற்றிபெறுவதாக இருந்தது. இது 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான விளைவுகளை சந்தித்து வந்த நிலையில் அக்கட்சியின் வியக்கத்தக்க மாற்றமாகும்.
பிரிட்டானிய தொழிலாளர் கட்சித் தலைவரான கியெர் ஸ்டார்மர் முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞராகவும், அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றிய அவர், நாட்டு மக்களுக்காக இடைவிடாத பணி நெறிமுறைகள் மூலம் நாட்டை சரி செய்வதில் முனைப்பில் உள்ளார்.
ரிஷி சுனக்கின் தோல்வியின் மூலம், 61 வயதான ஸ்டார்மர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் பிரிட்டானிய பிரதமர்களில் மிகவும் வயதான நபராக இருப்பார். மேலும், அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டில் வடக்கு அயர்லாந்தில் மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யும் பணியில் இணைந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சியின் கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து, வேல்ஸிற்கான பொது வழக்குகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2008 மற்றும் 2013 க்கு இடையில், எம்.பி.க்கள் செலவினங்களை தவறாக பயன்படுத்தியதற்காகவும், பத்திரிகையாளர்கள் ஃபோன் ஹேக்கிங்கிற்காகவும், இங்கிலாந்து முழுவதும் அமைதியின்மையில் ஈடுபட்ட இளம் கலகக்காரர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை கியெர் ஸ்டார்மர் மேற்பார்வையிட்டார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியால் நைட் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் "சர்" என்ற பட்டத்தை அரிதாகவே பயன்படுத்துகிறார்.
2015 நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வடக்கு லண்டனில் இடதுசாரி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவரது தாயார் பல ஆண்டுகளாக நடக்க முடியாத மூட்டுவலி நோயால் இறந்தார்.
2020 ஆம் ஆண்டில், தொழிலாளர் கட்சி 85 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பொதுத் தேர்தல் தோல்வியை சந்தித்ததால், அக்கட்சியை வழிநடத்த கெய்ர் ஸ்டார்மர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியின்கீழ் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் குழப்பத்தை கெய்ர் ஸ்டாமர்மரும், அக்கட்சியினரும் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
தனிப்பட்ட வாழ்க்கை
லண்டனுக்கு புறநகர் பகுதியில் 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி பிறந்தார் கியெர் ரோட்னி ஸ்டார்மர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவரது தாய் தீவிரமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர். இவரது தந்தையும் குழந்தைகள் மீது ஈடுபாடு காட்டதாவர்.
அவருக்கு உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். அவரது பெற்றோர் கழுதைகளை மீட்கும் விலங்கு பிரியர்களாக இருந்தனர்.
ஒரு திறமையான இசைக்கலைஞரான கியெர் ஸ்டாமர், 'டிஜே ஃபேட்பாய் ஸ்லிம்' முன்னாள் ஹவுஸ்மார்ட்டின் பாஸிஸ்ட் நார்மன் குக்குடன் பள்ளியில் வயலின் பாடங்களைக் கற்றார்.
லீட்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த கியெர் சட்டப் படிப்புகளுக்குப் பிறகு, தனது கவனத்தை இடதுசாரிக் கொள்கைகள் பக்கம் திருப்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.