குடிக்கும் தேநீரில் பூச்சிகொல்லியா? அடுத்த பயங்கரம்!

குடிக்கும் தேநீரில் பூச்சிகொல்லி கலந்திருக்கும் என்றால் நம்ப முடிகிறதா.. வெளியாகியிருக்கும் அடுத்த பயங்கரம்!
தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம்Center-Center-Tirunelveli

மழையோ வெயிலோ எப்போதுமே தேநீர் எனப்படும் டீ குடிக்க ஆர்வத்துடன் இருப்பவர்கள் அதிகம்பேர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தேயிலைத் தூளில் பூச்சிகொல்லிகள் கலக்கப்படுவதாக கர்நாடகத்தில் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாகக் கூறி கோபி மஞ்சூரியன், பானி பூரி, பஞ்சு மிட்டாய், கெபாப்கள் போன்ற உணவு பொருள்களில் நிறமிகளைச் சேர்க்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்த நிலையில், தற்போது கடைகளில் விற்கப்படும் தேநீருக்குத் தேவையான தேயிலையை உற்பத்தி செய்யும்போது அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகளும் நிறமிகளும் சேர்க்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ரோனமைன்-பி மற்றும் கார்மொய்சின் போன்ற ரசயானங்களைத்தான், உணவகங்களில், நிறமூட்டப் பயன்படுத்தி வந்தன. இவை உடலுக்கு தீங்குவிளைவிக்கும். தற்போது, தேயிலையில் ஏராளமான பூச்சிகொல்லி மருந்துகளும் நிறமிகளும் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்றுநோயை உருவாக்கும் என்கிறார்கள் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினர்.

அதாவது, தேயிலைத் தோட்டங்களில், பூச்சிகள் தாக்காதவண்ணம், அளவுக்கு அதிகமாக, அனுமதியளிக்கப்பட்டதைவிட அதிகமாக பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதாகவும், இதனால், தேயிலைகளில் அந்த பூச்சிகொல்லி மருந்துகளின் வீரியம் அப்படியே இருந்து, அதுதேயிலையாக தேநீரில் கலந்து, மனித உடலுக்குள் கலப்பதாகவும், அது வாடிக்கையாளரை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தேயிலைத் தோட்டம்
மகா கும்பமேளா: அசைவம் சாப்பிடாத, நன்னடத்தை காவலர்கள் தேவை!

கர்நாடகத்தில், தேநீர் அதிகம் பயன்படுத்தும் மக்களைக் கொண்ட 48 பகுதிகளிலிருந்து தேயிலையின் மாதிரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. பிடார், கடக், தார்வாத், ஹுப்பள்ளி, விஜயநகரம், பல்லாரி உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகள் தேயிலையில் கலந்திருப்பதை உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களுக்கு மிக மோசமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

முதலில், தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதிகப்படியான பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும், அடுத்து, மக்களும், தரம் குறைந்த உணவுகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும், சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்கிறார்கள்.

தேயிலைத் தோட்டம்
விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண் பராமரிப்புத் தொகை பெறலாம்: உச்ச நீதிமன்றம்

குறிப்பிடத்தக்க வகையில், கெபாப் மற்றும் கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளுக்குத் தடை விதிக்கவில்லை. அதில் கலக்கப்படும் நிறமிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தேயிலையின் மாதிரியில் மட்டும் கிட்டத்தட்ட 35 - 40 வகையான ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அனைத்துமே அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com