2 படுக்கையறை வீடுகளை வாங்குவாரில்லையாம்! உண்மையா?

பெரிய மற்றும் அதிக மதிப்புள்ள வீடுகளை வாங்கவே வீடு வாங்குவோர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..Center-Center-Delhi

புது தில்லி: ஒரு பக்கம் நாடு முழுவதும் வீடு உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையில், வாங்குவோரும் அதற்கேற்ப தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டிருப்பதாகவே புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பெரிய மற்றும் அதிக மதிப்புள்ள வீடுகளை வாங்கவே வீடு வாங்குவோர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனரோக் நுகர்வோர் சென்டிமென்ட் சர்வே நடத்திய ஆய்வின் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகியுள்ளது. அதில், 50 சதவீத இந்தியர்கள் வீடு வாங்கும்போது மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும், இரண்டு படுக்கையறை வீடுகளை வாங்க வெறும் 37 சதவீதம் பேர் மட்டுமேமுன்வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பிலிருந்து..
யானைக் கூட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை! நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கும் விடியோ

2022ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மூன்று படுக்கையறை வீடுகளை வாங்க 42 சதவீதம் பேர் முன்வந்தநிலையில், அதை விட அதிகமாக 45 சதவீதமாக இருந்துள்ளது இரண்டு படுக்கையறை வீடுகள் விற்பனை. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.

குறிப்பாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், தில்லி பகுதிகளில்தான் மூன்று படுக்கையறை வீடுகளுக்கு மவுசு அதிகரித்திருக்கிறதாம். ஆனால், விலை கடுமையாக இருக்கும் மும்பையில் இரண்டு படுக்கையறை வீடுகள் அதிகம் விற்பனையாகின்றன.

அதேவேளையில், 2024ஆம் ஆண்டில் நான்கு படுக்கையறை வீடுகளின் தேவை 4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், ஒரு படுக்கையறை வீடுகள் 7 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வு முடிவுகளின்படி, ரூ.45 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களில் 33%க்கும் அதிகமானவர்களுக்கு மிகவும் சாதகமான பட்ஜெட்டாக இருந்தாலும், பிரீமியம் மற்றும் ஆடம்பர வீடுகள் இழுபறியில்தான் இருக்கிறதாம். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் குறைந்தது 26% பேர் இப்போது ரூ.90 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான வீடுகளை விரும்புகிறார்கள். ரூ.1.5 கோடிக்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளுக்கான தேவையும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறந்த சொத்துப் பட்டியலில், வீடு மற்றும் மனைகள் இருந்த இடத்திலிருந்து 3 சதவீதம் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பங்குச் சந்தையை விடவும் 57 சதவீதம் பேர் வீடு வாங்குவது சிறந்த முதலீடாக இருப்பதாகவும் குறப்பிட்டுள்ளனர். கடந்த ஓராண்டைக் காட்டிலும் தற்போது ஏழு நகரங்களில் உள்ள வீடுகளின் விலைகள் 10 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயர்ந்திருப்பதும் இங்கே நினைவில்கொள்ளத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com