FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அண்ணாசாலை உயர்நிலை மேம்பாலம் கட்டுமானத்தில் சிக்கல்? வளையும் தூண்கள், வளையாத சாலை!

அண்ணாசாலை உயர்நிலை மேம்பாலம் கட்டுமானத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image

உயர்நிலை சாலை - Express

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:54 am IST

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான அண்ணாசாலை மேம்பாலம், செப்டம்பரில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உயர்நிலை மேம்பாலம் அமைக்கக் கட்டப்பட்டிருக்கும் தூண்கள் சற்று வளைந்து காணப்படுவதாகவும், ஆனால், அந்தப் பகுதியில் சாலை நேராக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில், அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினரால் ரூ.621 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் இருந்த மேம்பாலத்துக்கான வடிவமைப்பில், தற்போது எழுப்பப்பட்டிருக்கும் தூண்களுடன், மேம்பாலத்தை கட்டி முடிக்க முடியாது என்பது பொறியாளர்களுக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சைதாப்பேட்டை - நந்தனம் இடையே 80 தூண்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த நிலையில்தான், வடிவமைப்பு திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே இருக்கும் நந்தனம் - தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் பாதை நேராக இருக்கிறது. ஆனால், உயர்நிலை சாலைக்கான கட்டமைப்பு நேராக அமைக்கப்படவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக பெற்ற வடிவமைப்பும், கட்டுமானத்துக்கும் சற்று வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் நடு தூண்களை மையமாக வைத்து உயர்நிலை சாலை அமைக்கப்பட்டால் அது நேராக வராது, சற்று வளைந்து வரும் என்பதால், அங்கு மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போதைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் எனப்படுகிறது.

இந்த உயர்நிலை சாலை 14 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிச் சாலையாக அமையவிருக்கிறது.

இது தியாகராய சாலை, நந்தனம், சிஐடி முதல் முக்கிய சாலை உள்ளிட்ட பல சந்திப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இதனால், இந்த மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைய 2027 பிப்ரவரி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியஅளவில் கட்டுமானப் பணியில் மாற்றங்கள் இருந்தால், இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய வடிவமைப்பின்படி, இந்த உயர்நிலை சாலையானது பல இடங்களில் பல அளவுகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது.

அறிவாலயம் அருகே 32 மீட்டராக இருக்கும் சாலை, டிஎம்எஸ் அருகே 36 மீட்டராக இருக்கிறது. சைதாப்பேட்டை அருகே 40 மீட்டராக அதிகரிக்கிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

  • நந்தனம் - தேனாம்பேட்டை இடையே 2024 முதலே பணிகள் நடைபெறவில்லை என்றும், இதுவரை வெறும் 2 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளனவாம்.

  • தற்போது, நெடுஞ்சாலைத் துறை மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை கோரியிருக்கிறது.

Summary

Trouble with the Anna Salai elevated flyover construction?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.