இன்று காலை முதலே நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது சோதனை முடிவில் அவரது வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சோதனை முடிந்து வீட்டை விட்டு வெளியில் வந்த சரத்குமார் இது குறித்துப் பேசுகையில்;
இன்று ஆர்.கே நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு செல்லவிருந்த நிலையில், தனது ஆதரவுப் பிரச்சாரத்தை தடுக்கும் பொருட்டு, திட்டமிட்டு இப்படி ஒரு சோதனை தன் வீட்டில் நடத்தப் பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து சரத்திடம், வருமான வரிச் சோதனை தொடர்பாக செய்தியாளர்கள், உங்களது வீட்டில் திடீரென இப்படி ஒரு சோதனை ஏன் நிகழ்த்தப் பட்டது? என்ற கேள்வியை எழுப்ப; அதற்கு பதிலளிக்கும் விதமாக, அதைப் பற்றி எனக்குத் தெரியாது, என் வீட்டில் பணம் இருப்பதாக செய்தி வந்ததாகக் கூறி சோதனை செய்தார்கள், என் வீட்டில் அப்படி எதுவும் சிக்கவில்லை என்றதும் சோதனை முடிந்தது. என்னிடம் பணம் எதுவுமில்லை, சோதனைக்கு வந்தவர்கள் கொடுத்து விட்டுப் போனால் நல்லது! என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


