யார் செத்தாலும் பரவாயில்லை வீடியோ எடுத்து யூ டியூப்ல அப்லோட் பண்றது தான் ரொம்ப முக்கியமா?

தயவு செய்து ஒரு உயிர் ஆபத்தில் இருக்கையில் அதை ஆவணப் படுத்துவதை விட காக்க முயல்வது தான் முக்கியம் “என்பதை மக்கள் உணர வேண்டும்.”
யார் செத்தாலும் பரவாயில்லை வீடியோ எடுத்து யூ டியூப்ல அப்லோட் பண்றது தான் ரொம்ப முக்கியமா?
Published on
Updated on
1 min read

ஹரியானா மாநிலம் பரோலியைச் சேர்ந்த சஞ்சு என்ற பெண்மணிக்கும் அவரது கணவருக்குமிடையே சந்தேகத்தின் பேரில் முற்றிய குடும்பச் சண்டை ஒன்று கடைசியில் கொலை முயற்சியில் முடிந்தது. கடுமையான வாக்குவாதம் முற்றி மனைவியைக் கோடலியால் தாக்கிய கணவர் அங்கிருந்து தப்பி ஓட மனைவி ரத்த வெள்ளத்தில் தெரிவில் கிடந்தார். இதைக் கண்டு பயந்து போன அவர்களது மூன்று குழந்தைகள் செய்வதறியாது திகைக்க உதவ வேண்டிய அண்டை வீட்டுக்காரர்களோ முதலுதவி செய்யத் தோதான அந்தப் பொன்னான நிமிடங்களை வீணடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சுவின் மரணப் போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு யாரோ காவல்துறைக்கு இந்த அவலத்தை எடுத்துரைக்க விரைந்து வந்தனர் காவலர்கள்.

காவலர்களில் ஒருவரான ராம் மெஹர் இந்த அவலம் குறித்து கூறுகையில், ” “பாதிக்கப்பட்ட பெண்மணி தரையில் கிடந்து “ என் ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கிறது... என் உயிர் போய்க் கொண்டு இருக்கிறது... என்னை யாராவது காப்பாற்றுங்களேன்... காப்பாற்றுங்களேன் ”  என்று தீனமாகக் கதறிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பின்னும் அங்கிருப்போர் எவரும் அவருக்கு முதலுதவி அளிக்காமல் அவரது மரண அவஸ்தையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தை அடையும் போது இது தான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. காவலர்களான எங்களைப் பொறுத்தவரை பொது மக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது. தயவு செய்து ஒரு உயிர் ஆபத்தில் இருக்கையில் அதை ஆவணப் படுத்துவதை விட காக்க முயல்வது தான் முக்கியம் ... என்பதை மக்கள் உணர வேண்டும்.” என்றார்.

Image courtsy: Times of india

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com