அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி!

புதிய அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு கல்விக்கான விசா கிடைப்பதில்லை.
அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி!
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி  பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் இயங்கும் MIT தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பாடப் பிரிவில் சேர்ந்து பயில தனக்கு அட்மிஸன் கிடைத்திருப்பதாகவும், கல்லூரியில் சேர ஆகஸ்ட் மாதம் தான் அங்கே செல்லவிருப்பதாகவும் கூறினார். பெங்களூரு சர்வதேசப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவரான காவேரி கடந்த வாரத்தில் தான், 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப் படும் சர்வதேசப் பள்ளிகளுக்கான IB போர்டு தேர்வில் 45 மதிப்பெண்களுக்கு 44 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறினார்.

தனது பள்ளிப் படிப்பு மற்றும் மதிப்பெண் விகிதங்களில் தான் பெற்று வந்த தொடர் வெற்றிகளே உலக அளவில் சிறந்த இத்தனை பாரம்பரியம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்ததில் முக்கியப் பங்காற்றியதாக காவேரி தெரிவித்தார்.

மகளின் இந்தப் பெருமைக்குரிய சாதனையைப் பற்றிப் பேசும் போது காவேரியின் அப்பா ஸ்ரீகாந்த் நாதமுனி சொன்னதாவது; காவேரிக்கு சிறு வயதிலிருந்தே எதையும் பகுப்பாய்ந்து தெளிவடையும் மனது இருப்பதால் அவரது இந்த வெற்றி குறித்து நாங்கள் முன்னரே அனுமானித்திருந்தோம். டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவரை உலகின் பல முக்கியமான புராஜெக்டுகளில் கைகோர்க்க வைக்கலாம். காவேரி நிச்சயமாக நிறையச் சாதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றால். படிப்பு மட்டுமல்ல பெண்ணுக்கு இசையிலும் நிறைய ஆர்வம் உண்டாம். 4 வயதிலிருந்து தன்னுடைய பாட்டியிடமிருந்து கர்நாடக இசை கற்று வருகிறாராம் காவேரி. படிப்பு, படிப்புக்கு நடுவில் பாட்டு, பாட்டுக்குப் பிறகு தனது புதிய புராஜெக்டுகள் என காவேரி எப்போதும் செம பிஸி!

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு கல்விக்கான விசா கிடைப்பதில்லை. அதற்கு காரணம் ட்ரம்ப்பின் H- 1B விசா நடைமுறைக் கட்டுப்பாடுகளே! இச்சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றில் பயில அனுமதி கிடைத்திருப்பதற்காக அந்த மாணவியை எத்தனை பாராட்டினாலும் தகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com