திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜராஜன்(33) எனும் விவசாயி தனது தென்னந்தோப்பில் புதிதாக தென்னங்கன்றுகள் வைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது நிலம் தோண்டும் இயந்திரத்தின் நுனியில் கடினமான பொருளொன்று இடறியுள்ளது. பூமிக்கடியில் இடறும் அந்தப் பொருள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தில் அவர்கள் மேலும் நிலத்தைத் அகலமாகத் தோண்டியதில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. கண்டெடுக்கப் பட்ட சிலையில் நான்கு முகங்கள் இருந்த காரணத்தால் அது நான்முகனான பிரம்மா சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிலை கிடைத்த செய்தியை நிலத்தின் உரிமையாளரான ராஜராஜன் உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி ரஜேஷ் கன்னாவுக்கு தெரியப்படுத்தவே அவர் அச்செய்தியை உடனடியாக திருவையாறு தாசில்தாரான லதாவுக்கு தெரியப் படுத்தினார். அவரது உத்தரவின் பேரில் நடுகாவேரி காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் சிலரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தற்போது சிலை கிடைத்த இடத்துக்கு விரைந்து விவரங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னங்கன்றுக்காக நிலத்தைத் தோண்டிய போது கிடைத்த பிரம்மா சிலை தற்போது வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் சிலையின் வயதையும் அது உருவான காலகட்டத்தையும் அறிய தொல்லியல் துறையின் உதவியை நாடியுள்ளனர்.
96 வயதில் கல்வி கற்க கார்த்தியாயினி முன் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை! காரணம் இதுதான்!
ஓ மை காட்! நாங்க தப்பிச்சிட்டோம்: எஸ்கலேட்டரில் இருந்து தப்பிய தந்தை, மகனின் திகைப்பு!
செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!
கலைஞர், எம்ஜிஆர் நட்பின் சுவாரஸ்யத் துளிகள்...