திரைப்படங்களில் உதிரி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த எம்ஜிஆரை தான் வசனமெழுதும் திரைப்படங்களில் நாயகனாக நடிக்க சிபாரிசு செய்து கொண்டிருந்தார் கலைஞர். அப்படித்தான் ‘மந்திரி குமாரி’ திரைப்பட வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது. ஆனால், தன் திரைப்படத்தில் எம்ஜிஆரை நடிக்க வைக்க அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு விருப்பமில்லை. அவர் தனது மறுப்பைத் தெரிவிக்கும் நோக்கில்,
‘அட என்னய்யா, இந்த ஆளுக்கு முகவெட்டே சரியாயில்லை. மோவாயில் இருக்கும் பள்ளம் வேறு அசிங்கமாக இருக்கிறது. இவரா என் படத்துக்கு ஹீரோ? வேண்டாம்யா வேற ஆளை மாத்து’
- என்று சீரியஸாகவே அத்திரைப்படத்தின் கதை வசனகர்த்தாவான கலைஞரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் சொன்ன பதில், ‘அட மோவாய்ல இருக்கற குழி தான் உங்களுக்குப் பிரச்னைன்னா, அங்க ஒரு தாடிய ஒட்டுங்க’ என்று சொல்லி தன் நண்பரை விட்டுக் கொடுக்காமல் ஆரம்ப காலங்களில் இருவரும் இணைந்தே திரைத்துறையில் ஜொலிக்க வழி செய்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர், கலைஞரின் ஆரம்ப கால நட்பில் இப்படி சுவாரஸ்யமான ஆச்சார்யங்கள் ஏராளம் உண்டு...
சந்தேகமிருந்தால்... இப்போது கூட மந்திரி குமாரி திரைப்படத்தைப் பார்த்தீர்களெனில் அதில் எம்ஜிஆர் தனது மோவாய்க்குழியில் ஒட்யிருக்கும் சிறு தாடியொன்றைக் காணும் பேறு பெற்றவர்களாவீர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்

அடடா! 1 மணி நேர மின் தடையை நாசூக்காக சொன்ன தொல். திருமாவளவன்!

அரசுப் பள்ளிகளில் நாள்தோறும் காயத்ரி மந்திரம் கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு உத்தரவு







