சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இறந்தவர்களைக்கூட அவதூறாக பேசாதவர் மு.க. ஸ்டாலின்: தவெக புகழாரம்!

மு.க. ஸ்டாலின் குறித்து தவெக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தது குறித்து...

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 5:03 pm IST

இறந்தவர்களைக்கூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று தவெக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தவெக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”உதயநிதி ஸ்டாலின் அவ்வாறு பேசினால், கைது செய்யாமல் என்ன செய்வார்கள்? சம்பந்தமில்லாத நடிகையைப் பற்றி பேசுகிறார்கள்” என்றார்.

மேலும், ”பேசுவதை பேசிவிட்டு காவிரியை கூறினேன் என குறிப்பிடுகிறார் உதயநிதி, காவிரி தாயையும் அசிங்கபடுத்துகிறார்கள்.

திமுகவினருக்கு தோற்ற வெறி அடங்கவில்லை. தமிழக முதல்வரை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர்தான் கூறுகிறார். அப்படி என்றால் திமுகவினரால் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை எதிர்த்து பேச முடியுமா?

த்ரிஷா ஒரு நடிகை, அவர் அவரது வேலையைப் பார்த்து கொண்டிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின் அவரது அப்பாவிடம் சென்று எவ்வாறு பேச வேண்டும் எனக் கேட்கச் சொல்லுங்கள். இறந்தவரைகூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.

சட்டம் அதன் கடமையை செய்கிறது, உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல், இது போன்று நடவடிக்கைகள்தான் பாயும்.

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதும் காவிரி பெருக்கெடுத்து வந்துவிட போகிறதா?” என்று புகழேந்தி தெரிவித்தார்.

Summary

TVK Chief Spokesperson Pugazhendhi has stated that former Chief Minister Stalin is someone who does not speak ill even of the deceased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.